உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை

கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் துர்கையம்மனுக்கு ராகு கால சிறப்பு பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள துர்கையம்மனுக்கு ராகு கால சிறப்பு பூஜை நேற்று நடந்தது. துர்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பெண் பக்தர்கள் பங்கேற்று லலிதா சகஸ்ரநாம மந்திரம் வாசித்து, நெய் தீபம் ஏற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !