அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நிழற்கூடாரங்கள் உபயம்
ADDED :14 minutes ago
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக ராமர் சன்னதி முன்பு, தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ தங்கம் ஜூவல்லரி நிர்வாகம் சார்பில் ரூ.2.5 லட்சம் மதிப்பில் நிழற்கூடாரங்கள் உபயமாக வழங்கப்பட்டன. நிர்வாக இயக்குநர் கார்த்தி, பொது மேலாளர் வெங்கட் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், கோயில் நிர்வாகம் சார்பில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், கண்காணிப்பாளர் பாலமுருகன், பி.ஆர்.ஓ., முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.