உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்

கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்

கோவை: ஐப்பசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஒரு உற்சவர் ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக பக்தர்களுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


ஐப்பசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பக்த அனுமன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !