உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்ய சாய்பாபா யார்? பக்தர்கள் அவரை கொண்டாடுவது ஏன்?

சத்ய சாய்பாபா யார்? பக்தர்கள் அவரை கொண்டாடுவது ஏன்?

சத்யசாய் பாபாவின், 100 வது பிறந்த நாளை ஒட்டி, உலகம் முழுவதும் அன்பு மற்றும் சேவையை பரப்பும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பக்தர்கள்  பாபாவின், 100 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 


சத்ய சாய்பாபா யார்? ஒரு ஆன்மீக ஆர்வலருக்கு, அவர் தெய்வீக குரு; ஒரு பகுத்தறிவாளர்க்கு, அவர் பூமியில் மிகச்சிறந்த மனிதாபிமானி; ஆயிரக்கணக்கான நவீன இளைஞர்களுக்கு, அவர் ஒரு துடிப்பான பார்வை மற்றும் உத்வேகத்தின் மகத்தான தலைவர்; ஒரு பக்தருக்கு, அவர் மனித வடிவத்தில் தெய்வீகம்; அவரைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்ற அனைவருக்கும், அவர் இரண்டு கால்களில் நடக்கும் தூய அன்பு.


பகவான் பாபாவிடம், "நீங்கள் கடவுளா?" என்று கேட்டால், அவர் கூறுகிறார்: "ஆம், நான் கடவுள், நீங்களும் அப்படித்தான். உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்த உண்மையை நான் அறிந்திருந்தாலும், நீங்கள் அறியாமல் உள்ளீர்கள் என்று அனைவரும் கடவுளின் வடிவமே என்று உணர்த்துகிறார் பாபா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !