உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் செவ்வாய் சிறப்பு வழிபாடு

கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் செவ்வாய் சிறப்பு வழிபாடு

கோவை;  ஐப்பசி மாதம் சப்தமி திதி மற்றும் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் அமைந்துள்ள துர்கா - லட்சுமி - சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவர்கள் துர்கா -லட்சுமி -சரஸ்வதி ஆகியோர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !