பழநி முருகன் கோயில் ரோப் கார் இரண்டு நாட்கள் நிறுத்தம்
ADDED :1 hours ago
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் பாதுகாப்பு, உறுதி தன்மையை சோதிக்கும் என்.டி.டி.,சோதனை நாளை முதல் இருநாட்கள் (நவ.13, 14ல்) நடக்க உள்ளது. இதன் காரணமாக ரோப் கார் சேவை இரண்டு நாட்கள் தற்காலிகமாக இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித் துள்ளது. பக்தர்கள் கோயில் சென்றுவர வின்ச், படிப்பதை, யானைப்பாதையை பயன் படுத்தலாம்.