உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூட்டானில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை; பிரதமர் மோடி பங்கேற்பு

பூட்டானில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை; பிரதமர் மோடி பங்கேற்பு

பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் மைதானத்தில் இன்று முதல் இரண்டு நாட்கள் பிரிவினையற்ற வஜ்ராயன பௌத்த அமைதி பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு செய்தார்.


பூட்டான் நாடு நவம்பர் 4 முதல் 17 வரை திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவை நடத்துககிறது. இது நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றாகும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் அதிகரித்து வரும் மோதல்கள், பிளவுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த விழாவானது உலகளாவிய அமைதிக்காக நடத்தப்படுவதாகும். விழாவின் ஒரு பகுதியாக காலச் சக்கரம் அபிஷேக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.


இது பிரதமர் மோடி கூறியதாவது; பூட்டான் மன்னர் மாட்சிமை தங்கிய ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சக் மற்றும் மாட்சிமை தங்கிய நான்காவது ட்ருக் கியால்போ ஆகியோருடன் கலசக்ரா காலச் சக்கரம் அதிகாரமளிப்பைத் தொடங்கி வைக்கும் பெருமையைப் பெற்றேன். இதற்கு ஜெ கென்போ தலைமை தாங்கினார், இது இதை இன்னும் சிறப்பானதாக்கியது. உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு இது ஒரு முக்கியமான சடங்கு, இது மிகவும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. கலசக்ரா அதிகாரமளிப்பானது பூட்டானுக்கு பக்தர்களையும் புத்த மத அறிஞர்களையும் ஒன்றிணைத்து நடைபெற்று வரும் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவின் ஒரு பகுதியாகும். என்று கூறிபிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !