தேய்பிறை அஷ்டமி; சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :328 days ago
கோவை; ஐப்பசி, தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவை ஆர். எஸ். புரம் - பொன்னைராஜபுரம் - சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணா நகரில் இருக்கும் ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலபைரவாஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.