உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த ரஷ்யா, உக்ரைன் பக்தர்கள்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த ரஷ்யா, உக்ரைன் பக்தர்கள்

மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆண்டில் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஒரே ஸ்தலமாகும் மேலும் பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவிலுக்கு ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த 10 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்குள் சென்று விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி, மற்றும் அபிராமி அம்மன் சன்னதிகளில் பக்தி ஸ்லோகங்கள் சொல்லி அர்ச்சனை செய்து பக்தியுடன்   வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !