கள்ளக்குறிச்சி சங்கரலிங்கசாமி சித்தர் பீடத்தில் கால பைரவர் ஜெயந்தி விழா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சங்கரலிங்கசாமி சித்தர் பீடத்தில் கால பைரவர் ஜெயந்தி விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி பெருவங்கூர் சாலை கோமதியம்மன் உடனுறை சங்கரலிங்கர் சித்தர் பீடத்தில் கால பைரவர் ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு, பைரவர் கலச ஸ்தாபனம், கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து கலச புறப்பாடு, அபிஷேகம், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பைரவ பீஜாஷ்ர ஹோமம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு மஹா பூர்ணாகுதி நடத்தி, மூலவர் பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர், கள்ளக்குறிச்சி கஸ்துாரிபாய் தெரு மற்றும் நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், தென்கீரனுார் அருணாச்சலேஸ்வரர், கணங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமா மகேஸ்வரர் கோவில்களிலும் கால பைரவர் ஜெயந்தி விழா நடந்தது.