உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி ராஜகுபேரர் கோவிலில் வரும் 18ல் குபேர வாசல் திறப்பு

காஞ்சி ராஜகுபேரர் கோவிலில் வரும் 18ல் குபேர வாசல் திறப்பு

காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள ராஜகுபேரர் கோவிலில், வரும் 18ம் தேதி குபேர வாசல் திறக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் வெள்ளகேட், குபேரபட்டிணத்தில் ராஜகுபேர கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள குபேர வாசல் ஆண்டு தோறும் கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டும் திறக்கப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டு கார்த்திகை மாத சிவராத்திரியான வரும், 18ம் தேதி காலை 4:30 மணிக்கு குபேர வாசல் திறக்கப்பட உள்ளது. பக்தர்கள் இரவு 10:00 மணி வரை குபேர வாசல் வழியாக சென்று, சுவாமி தரிசனம் செய்யலாம் என, கோவிலின் பரம்பரை நிர்வாக அறங்காவலர் ராஜ குபேர சித்தர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !