சோமநாத் லிங்க கண்காட்சி
ADDED :4666 days ago
புதுச்சேரி : பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் சோமநாத் லிங்க கண்காட்சி இன்று 29ம் தேதி நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் லிங்கத்தை அனைத்து மக்களும் கண்டுகளித்து ஆன்மிகப் பயனடையும் வகையில் பிரம்மகுமாரிகள் இயக்கம் தரிசனக் காட்சிக்கு மாணிக்க முதலியார் திருமண நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில், கோவில் போன்று சுவாமியை தத்ரூபமாக வைத்திருந்தனர். இவ்வுலக நாடகம் பற்றிய கண்காட்சி, மனம், உடல் ஆரோக்கியத்திற்கான இலவச தியானப் பயிற்சி நடந்தது. டிசம்பர் 28 துவங்கிய ஜோதி லிங்க கண்காட்சி, இன்று 29ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. பொது மக்கள் இலவசமாக பார்வையிடலாம்.