சிவன் கோவிலில்ஆருத்ரா தரிசனம்
கும்பகோணம்: மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு, கும்பகோணம் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஸ்வாமி வீதியுலா நடந்தது.மார்கழி மாத திருவாதிரை அன்று நடராஜ பெருமானின் திருநடனத்தை காணும் வகையில், ஆண்டுதோறும் இதேநாளில் அனைத்து சிவன்கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடக்கும். அதன்படி, நேற்று கும்ப÷காணத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அதிகாலை நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகங்கள் மற்றும் மஹாதீபாராதனை நடந்தது.ஆதிகும்பேஸ்வர ஸ்வாமி, அபிமுகேஸ்வர ஸ்வாமி, ஆதிகம்பட்ட விஸ்வநாத ஸ்வாமி, கோடீஸ்வர ஸ்வாமி, வியாழசோமேஸ்வர ஸ்வாமி, நாகேஸ்வர ஸ்வாமி கோவில்களின் ஸ்வாமி மற்றும் அம்பாள் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் அனைத்து கோவில்களிலிருந்து சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமான், சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா காட்சி நடந்தது.கும்பகோணம் நகரில் அனைத்து வீதிகளிலும் சென்று, அந்தந்த கோவில்களை வந்தடைந்தது. இதில் காலை முதல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.