ஆருத்ரா தரிசன விழா; சிறப்பு யாகசாலை !
ADDED :4665 days ago
அவலூர்பேட்டை : அகத்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.விழாவை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி சமேத நடராஜர் சுவாமி, நாயன்மார்கள் புடைசூழ மாடவீதி வலம் நடந்தது. இதே போல் வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் அதிகாலையில் யாகசாலை பூஜை , அபிஷேகம் தீபாராதனை நடந்தது.