செவிலிமேடு பாலாற்றங்கரையில் முடவன் முழுக்கு சிவபூஜை
ADDED :1 hours ago
செவிலிமேடு: காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றங்கரையில், முடவன் முழுக்கு, துலா ஸ்நானம் எனப்படும் சிவபூஜை இன்று நடந்தது.
காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றில் திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில், காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றங்கரையில், முடவன் முழுக்கு, துலா ஸ்நானம் எனப்படும் சிவ பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான முடவன் முழுக்கு, துலா ஸ்நானம் சிவபூஜை, இன்று காலை 9:00 மணிக்கு காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றங்கரையில் நடந்தது. இதில், சிவனடியார்கள் ஆற்று மணலில் லிங்கம் அமைத்து, மலர் அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடந்தது. மேல்மருவத்துார் சித்தர்பீட சொற்பொழிவாளர் சக்தி பு.கந்தன், ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.