உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் சத்திய நாராயண விரதம்; ரதோத்சவம் கோலாகலம்

புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் சத்திய நாராயண விரதம்; ரதோத்சவம் கோலாகலம்

புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா 100வது பிறந்த நாளை முன்னிட்டு பிரசாந்தி நிலையத்தில் இன்று ஸ்ரீ சத்ய சாய் சத்திய நாராயண பூஜை மற்றும் வருடாந்திர ரதோத்சவம் நடைபெற்றது. 

விழாவானது இன்று காலை, சீதா ராமர் மற்றும் வேணுகோபால சுவாமியின் பல்லக்கு ஊர்வலத்துடன் நிகழ்வுகள் தொடங்கின. முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க, பிரார்த்தனைகள், அச்சமனம், பிராணாயாமம், சங்கல்பம், கலச பூஜை, பீட பூஜை, பிராண பிரதிஷ்டை, ஸ்ரீ மகாகணபதி பூஜை, நைவேத்யம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆரத்தி மற்றும் ஸ்ரீ சத்ய சாய் அஷ்டோத்தரம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, அவரது எல்லையற்ற மகிமையின் சத்ய நாராயண விரத கதைகள் (பகவான் ஸ்ரீ சத்ய சாயின் தெய்வீகக் கதைகள்) ஐந்து தனித்துவமான அத்தியாயங்களில் வழங்கப்பட்டன, பல்வேறு சிறப்பு வழிபாடுகளுக்கு பின் ரதோத்சவம் கோலாகலமாக துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவானின் பாடல்களை பாடியும், தேரின் முன் பரவசத்துடன் ஆடியும் வந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !