புட்டபர்த்தியில் சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய் தரிசனம்; குவியும் பக்தர்கள்
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இந்தாண்டு ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிரபல கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசாந்தி நிலையத்தில் பகவான் சத்ய சாய்பாபாவை தரிசனம் செய்தனர். சத்ய சாய் ஜென்ம தின கொண்டாட்டங்களில் பங்குபெற்றனர். இன்று பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். வரும் நவம்பர் 23 அன்று பகவானின் அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.