உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழாக்கோலம் பூண்டது புட்டபர்த்தி; சத்ய சாய் மகா சன்னிதியில் பிரதமர் மோடி தரிசனம்

விழாக்கோலம் பூண்டது புட்டபர்த்தி; சத்ய சாய் மகா சன்னிதியில் பிரதமர் மோடி தரிசனம்

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பாரத பிரதமர் நரேந்திர மோடி, புட்டபர்த்திக்கு வருகை தந்து பகவானின் மகா சன்னிதியில் தரிசனம் செய்தார். புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் ஹில் வியூ ஸ்டேடியத்தில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.


இதற்காக புட்டபர்த்தி வந்த பிரதமருக்கு சிற்பபான வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். புட்டபர்த்தி நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது. முன்னதாக, பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


முன்னதாக பிரதமர் தனது வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளதாவது; புட்டபர்த்தியில் நடைபெறும் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுடன் கலந்து கொள்வதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். சமூக சேவை மற்றும் சமூகத்தின் ஆன்மீக விழிப்புணர்வுக்கான அவரது வாழ்க்கை மற்றும் முயற்சிகள் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக அவருடன் தொடர்பு கொள்ளவும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் எனக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. என குறிபிட்டுள்ள பிரதமர் பாபாவுடன் தனது பல்வேறு படங்களை பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !