உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொடர் மழை; குறுக்குத்துறை முருகன் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது

தொடர் மழை; குறுக்குத்துறை முருகன் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது

திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை நிலவரப்படி அதிகபட்சமாக மணிமுத்தாறு ஊத்து எஸ்டேட் பகுதியில் 23.2 செ.மீ. நாலுமுக்கு பகுதியில் 21 செ.மீ.,மாஞ்சாலையில் 17.6 செ.மீ., காக்காச்சியில் 19.1 செ.மீ. மழை பதிவானது. மாவட்டத்திலும் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. பாபநாசம் அணையில் இருந்து 200 கன அடி வீதமும் மணிமுத்தாறு அணையில் இருந்து 500 கன அடி வீதமும் தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தைவிட அதிகமான அளவு தண்ணீர் சென்றது. திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோவிலை சுற்றிலும் வெள்ள நீர் சென்றது. கோயிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. திருநெல்வேலியில் தொடர் மழையினால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறுக்குத்துறை முருகன் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !