உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை மேலவள்ளம் பிரத்யங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

மயிலாடுதுறை மேலவள்ளம் பிரத்யங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

மயிலாடுதுறை; கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் அம்பாளை வழிபட்டால் பாவ சாப தோஷங்கள் மற்றும் சத்ரு உபாதைகள் நீங்கும். இக்கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்கள் மிளகாய் மற்றும் பல்வேறு நறுமண பொருட்கள் யாக குண்டத்தில் இடப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்திற்கு பின் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. யாகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !