மின்விளக்குகளால் ஜொலிக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரம்
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் 9 கோபுரங்கள், 20 கி.மீ., துாரம் தெரியும் மின்விளக்குளால் அலங்காரம் செய்யப்பட்டு பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளன.
விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் இணைந்து செய்து வருகின்றன. விழாவில், கோவிலில் உள்ள, கிழக்கு ராஜகோபுரம், தெற்கு திருமஞ்சன கோபுரம், மேற்கு கோபுரம், வடக்கு அம்மனி அம்மன் கோபுரம் உள்ளிட்ட, 9 கோபுரங்கள் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்டு இவை, 20 கி.மீ., துாரம் வரை தெரியுமளவிற்கு ஜொலிக்கின்றன. மேலும், கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளன. தீப திருவிழாவால் திருவண்ணாமலை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.