உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜர் நடனத்துடன் ஆருத்ரா தரிசனம்

நடராஜர் நடனத்துடன் ஆருத்ரா தரிசனம்

ஈரோடு: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.டிசம்பர் 28 காலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், பின் அலங்காரத்தில் கோவில் முன் பக்தர்கள் புடைசூழ, சுவாமி நடன வைபவமும் நடந்தது. ஏராளமான பெண்கள் கோலாட்டம் அடித்து, ஆடினர். முன்னதாக வெள்ளி ரதத்தில் சுவாமி உலா வந்து காட்சியளித்தார்.* பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.கடந்த 19ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் விழா துவங்கியது. 20 முதல், 26ம் தேதி வரை திருவெண்பாவை உற்சவம் நடந்தது. டிசம்பர் 27 மாலை பிஷாண்டவர் புறப்பாடு, வேதநாயகி உடனமர் சங்க÷மஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.டிசம்பர் 28 அதிகாலை, ஸ்ரீநடராஜர் பெருமானுக்கு மஹாஅபிஷேகம், தீபாராதனை, தரிசனம் நடந்தது. சங்கமேஸ்வரர் கோவில் சுப்ரமணிய குருக்கள், மணிகண்ட ஐயர், சங்கர் உள்ளிட்டோர் சுவாமி அலங்காரம் செய்தனர்.ஸ்ரீநடராஜர் பெருமான் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து அருளினார். நிறைவாக, அன்னதானம் நடந்தது. ஆருத்ரா தரிசன விழாவில், திருமணம் ஆன பெண்கள் தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுள் வழங்க வேண்டினர். பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகாளை உதவி ஆணையாளர் நடராஜன் செய்திருந்தார்.
* சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பல்லாக்கில் உலா வந்தார்.சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் ஆருத்ர தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்சவர் சிலைக்கு மாலை அணிவித்து, மாட்டு வண்டியில்அரியப்பம்பாளையம் பகுதியில் வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !