உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகரீகத்தை பண்படுத்திய மகான்; ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் சிறப்புரை

நாகரீகத்தை பண்படுத்திய மகான்; ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் சிறப்புரை

புதுடில்லி; ஜவஹர்லால் நேரு பல்கலையில் ‘சிருங்கேரி 12வது பீடாதிபதி ஸ்ரீ வித்யாரண்ய சுவாமிகள் – நாகரீகத்தை பண்படுத்திய மகான்’ என்ற தலைப்பில் ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் நேற்று சிறப்பு உரையாற்றினார்.


சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியா ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மகாஸ்வாமிகள் நேற்று புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு வளாகத்தில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ்  ஆய்வுக் கழகத்தில் அருளினார். சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியாருக்கு துணைவேந்தர், பேராசிரியர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிதர், நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மரியாதையுடன் வரவேற்றனர். ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் பிரம்மசூத்ர பாஷ்ய மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை பாஷ்யத்தின் சிறப்பு வஜ்ரோத்ஸவ பாரதி பதிப்பு ஜகத்குரு ஸ்ரீ சன்னிதானம் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் சேர்க்கப்பட்டது. ‘சிருங்கேரி 12வது பீடாதிபதி ஸ்ரீ வித்யாரண்ய சுவாமிகள் – நாகரீகத்தை பண்படுத்திய மகான்’ என்ற தலைப்பில் ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் நேற்று சிறப்பு உரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !