உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; ஆனந்தவனம் பாரதி சுவாமிகள்

தர்ம சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; ஆனந்தவனம் பாரதி சுவாமிகள்

பெ.நா.பாளையம்; தர்ம சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என, மகா மண்டலேஸ்வரர் சுவாமி ஆனந்தவனம் பாரதி பேசினார்.


கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் ரோடு, அமிர்த வித்யாலயா பள்ளி வளாகத்தில் உள்ள பிரம்மஸ்தான ஆலயத்துக்கு வருகை தந்த ஆனந்தவனம் பாரதி சுவாமிகள் பக்தர்களிடையே பேசுகையில்,"தர்மத்தை நாம் பின்பற்றினால், தர்மம் நம்மை காக்கும். அது வாழ்க்கையில் நம்மை தவறான பாதையில் அழைத்துச் செல்லாமல், நேர்மையான பாதையில் அழைத்துச் சென்று, நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றும். இதனால் நற்சிந்தனை பெருகி, நம்மை சுற்றி உள்ளவர்களையும் வாழ வைக்கும். ஒவ்வொருவரும் நேர்மையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள், ஆச்சாரியார்கள் நமக்கு கற்றுத் தந்த பக்தி மார்க்கத்தில் பயணம் செய்ய வேண்டும்" என்றார். பின்னர் சுவாமி ஆனந்தவனம் பாரதி நிருபர்களிடம் பேசுகையில்," வரும் ஜன., மாதம் கேரளாவில் பாரதப்புழாவில் மிகப்பெரும் கும்பமேளா நடக்கிறது. இதில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் வசிக்கும், திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது" என்றார். நிகழ்ச்சியில், அமிர்த வித்யாலயா நிர்வாகிகள் பிரம்மச்சாரி நிகிலேஷாமிர்தா சைதன்யா, பிரம்மச்சாரிணி சர்வாமிர்தா சைதன்யா உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !