திருச்செந்தூர் முருகன் கோவில் தக்கார் நியமனம் சரியானதே!
ADDED :4659 days ago
திருச்செந்தூர்:திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தக்கார் நியமனம் சரியானதே என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது குறித்து கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் கூறியதாவது. இக்கோவிலில் இந்து அறநிலையத்துறையானது கடந்த 16.11.2011 அன்று என்னை தக்காராக நியமனம் செய்தது. இதை எதிர்த்து திருச்செந்தூர் ஒன்றிய திமுக முன்னாள் இனளஞரணி அமைப்பாளர் மணல்மேடு சுரேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இவ்வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தக்கார் நியமனம் செய்தது சரி என தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.