உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சனுார் பத்மாவதி தாயாருக்கு கூடை கூடையாக நடைபெற்ற புஷ்பயாகம்!

திருச்சனுார் பத்மாவதி தாயாருக்கு கூடை கூடையாக நடைபெற்ற புஷ்பயாகம்!

திருப்பதி: திருப்பதி திருச்சனுார் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. நிறைவு நாளில் பத்மாவதி தாயாருக்கு புஷ்பயாகம் செய்யப்பட்டது.இந்த புஷ்ப யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, நேற்று மாலை வருடாந்திர புஷ்பயாகம் நடந்தது.திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாதம், 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று நடந்து முடிந்தது. அதில், ஏற்பட்ட நிறை குறைகளை சரி செய்ய வருடாந்திர புஷ்பயாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று தாயாரின் வருடாந்திர பிரம்மோற்சவம் பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மதியம் தாயாருக்கு புஷ்பயாகம் நடந்து. அதை முன்னிட்டு, தாயாருக்கு காலை வசந்த மண்டபத்தில் பால், தயிர், இளநீர், பழரசங்கள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின், தாயாரை அலங்கரித்து தீப, துாப ஆராதனைகள் நடத்தி மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.அதற்கு பின் ரோஜா, அரளி,சாமந்தி, மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள், துளசி, மருவம், வில்வம் உள்ளிட்ட இலைகள் ஆகியவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !