கார்த்திகை தீப சொக்கப்பனை; ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி
திருச்சி; கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் சொக்கப்பனை நிகழ்வுக்காக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி அன்று சொக்கப்பனை கொளுத்தப்படும் அதற்காக கோவில் வளாகத்தில் இருக்கும் கார்த்திகை கோபுரம் வாயில் முன்பாக சொக்கப்பனை அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சுமார் 20 அடி உயரம்கொண்ட தென்னைமரத்தின் நுனியில் மாலை, சந்தனம், மாஇலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் கட்டப்பட்டு அர்ச்சகர்களால் வேதமந்திரங்கள் முழங்கிட புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க முகூர்த்த கால் நடப்பட்டது. அப்போது கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி அதற்கு மரியாதை செலுத்தியது. கார்த்திகை தீபத்திருநாள் அன்று நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகி