உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சம்பக சஷ்டி விழா; ஈஸ்வரன் கோயில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

சம்பக சஷ்டி விழா; ஈஸ்வரன் கோயில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

பரமக்குடி; பரமக்குடி ஈஸ்வரன் கோயில் பைரவருக்கு சம்பக சஷ்டி விழாவில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது.


பரமக்குடி விஷாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் தனி சன்னதியில் பைரவர் அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு கார்த்திகை மாதம் அமாவாசைக்கு பிறகு சம்பக சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி ஈஸ்வரன் கோயிலில் நேற்று காலை ஹோமம் பூர்ணாகுதி நிறைவடைந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் மாலை பைரவர் சிகப்பு சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். *இதேபோல் மீனாட்சி அம்மன் கோயில், சக்தி குமரன் செந்தில் கோயில் பைரவர் மற்றும் தரைப்பாலம் முருகன் கோயில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !