உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜை துவங்கியது; டிச.1ல் கும்பாபிஷேகம்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜை துவங்கியது; டிச.1ல் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர், – கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத் திருவிழா தொடர்புடைய 12 சைவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில்,  கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து, கும்பாபிஷேகம் செய்வதற்காக, கடந்த 2023ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில், வரும் டிச.1ம், தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 99 குண்டங்கள் கூடிய யாகசாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. இதையடுத்து இன்று இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், நாளை நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும், 30ம் தேதி ஆறு மற்றும் ஏழாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது. மூன்றாம் கால யாகசாலை பூஜையான இன்று(28ம் தேதி), உலக புகழ்பெற்ற கல்நாதஸ்வரம் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு வாசிக்கப்பட உள்ளன. 


விழாவின் முக்கிய நிகழ்வான வரும் டிச.1ம் தேதி அதிகாலை எட்டாம் கால யாகசாலை பூஜையும், விக்னேஸ்வர பூஜை,புண்யாஹவாசனமும், காலை 6:45 மணிக்கு விமான மஹா கும்பாபிஷேகம், 7:15 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாதாரனை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஒன்றரை அடி முதல் 9 அடி உயரமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட 44 கலசங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் யாகசாலை பூஜையில் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !