புதுச்சத்திரம் தர்காவில் சந்தனக்கூடு விழா
ADDED :43 minutes ago
புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ஆலோடிசாப் தர்காவில், சந்தனக்கூடு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு ஆலோடி சாப் தர்காவில், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சந்தனக்கூடு விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த, 21ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி அன்றைய தினம் காலை 6:00 மணிக்கு சிறப்பு தொழுகை, 7:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சிறப்பு விழாவான சந்தனக்கூடு விழா, நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, உலக நன்மை வேண்டி சிறப்பு தொழுகையும், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு உரூஸ் எனும் சந்தனம் பூசும் சந்தனக்கூடு விழா நடந்தது. இதில் சுற்று பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள், ஊர் ஜமாத்தார்கள் செய்தனர்.