அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: மஞ்சள் வளத்துடன் வாழ்க!
ADDED :4746 days ago
2013ம் ஆண்டின் கூட்டுத்தொகை 6. இதற்குரிய கிரகம் சுக்கிரன். சுக்கிரனுக்குரிய தலம் ஸ்ரீரங்கம். பெண்கள் தீர்க்கசுமங்கலி வரம் பெற, ஸ்ரீரங்கம் சென்று, ரங்கநாதரையும். ரங்கநாயகி தாயாரையும் வணங்கி வர வேண்டும். அத்துடன் ரங்கநாதருக்குரிய பாசுரங்களையும் பாடுங்கள்.
பச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!