எட்டயபுரத்தில் ஜோதி ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை!
ADDED :4747 days ago
எட்டயபுரம்: எட்டயபுரத்தில் ஜோதி ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை நடந்தது. எட்டயபுரம் நடுவிற்பட்டி ஜோதி ஐயப்ப பக்தர்கள் 27ம் ஆண்டு மண்டல பூஜை அகண்டநாமம் வழிபாட்டுடன் துவங்கியது. மறுநாள் அண்டநாமம் நிறைவுற்று இரவில் வான வேடிக்கை மங்கள வாத்தியங்கள் முழங்க ஐயப்ப பக்தர்கள் குடிலிலிருந்து புறப்பட்டு குருசுவாமியின் வீட்டுக்கு சென்று ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக புஸ்பம்கும்பம் சங்கரன் குருசாமி வீட்டிலிருந்து திருவீதிஉலாவாக வந்து ஜோதி ஐயப்ப பக்தர்கள் குடிலை வந்தடைந்தது. ஐயப்பனுக்கு புஸ்பாஞ்சலி சிறப்பு பூஜைகளுடன் நடந்தது.அதையடுத்து மண்டல பூஜை நடந்தது. 32 கன்னிசுவாமிகளுக்கு கூட்டு கன்னிபூஜை நடந்தது. அதையடுத்து அன்னதானம் நடந்தது.