உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடைபெற்றது 2012... குதூகலமாய் 2013: அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு!

விடைபெற்றது 2012... குதூகலமாய் 2013: அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு!

ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடக்கிறது. இரவு 12 மணியுடன் 2012ம் ஆண்டு முடிந்து இன்று அதிகாலை 2013ம் புத்தாண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தூத்துக்குடியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கடந்தாண்டிற்கு நன்றியை தெரிவிக்கும் வகையில் நன்றி திருப்பலி, புதிய ஆண்டினை வரவேற்கும் வகையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி, உலக மக்களின் நன்மைக்கான திருப்பலிகள் நடக்கிறது. தூத்துக்குடியில் உள்ள சின்னகோவிலில் பிஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடக்கிறது. புனித பனிமய மாதா பேராலயத்தில் பங்குதந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதேபோல் பேட்ரிக் சர்ச், கால்டுவெல் காலனி சர்ச், மூன்றாம் மைல் சர்ச், டூவிபுரம் சர்ச், அந்தோணியார் கோவில், கோரம்பள்ளம் தூய மிகாவேல் ஆலயம், போல்பேட்டை சர்ச் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடக்கிறது. புத்தாண்டினை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதல் இளைஞர் பட்டாளம் மாநகர் பகுதி முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன் வலம் வந்த வண்ணம் இருந்தனர். அனைத்து திருக்கோவில்களும் இன்று அதிகாலையில் நடை திறக்கப்படுகிறத. தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவில், பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷே கங்களும், தீபாரா தனைகளும், அர்ச்சனைகளும் நடக்கிறது. இதேபோன்று இரண்டாம் ரயில்வே கேட் அரசமர விநாயகர் கோவில், 3ம் மைல் பத்திரகாளியம்மன் கோவில், வேம்படி இசக்கியம்மன் கோவில், சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில், மடத்தூர் பத்திரகாளியம்மன் கோவில், கோரம்பள்ளம் இசக்கியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !