ஜம்புலிப்புத்தூர் பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED :15 hours ago
ஆண்டிபட்டி; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் லோகிராஜன், செயல் அலுவலர் சுதா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு கோயிலின் வடக்கு சுற்றுப் பிரகாரத்தில் கதலி நரசிங்கப்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. சொர்க்க வாசலில் காத்திருந்த ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த சுவாமி வடக்கு வாசல் வழியாக சென்று அங்குள்ள மண்டகப்படி மண்டபத்தில் எழுந்தருளினார். பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.