உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்திருப்பதி ஸ்ரீ வாரி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு ; பக்தர்கள் பரவசம்

தென்திருப்பதி ஸ்ரீ வாரி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு ; பக்தர்கள் பரவசம்

மேட்டுப்பாளையம்; தென்திருப்பதி ஸ்ரீ வாரி கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற வைனவ திருத்தமான தென்திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவாரி கோயில் உள்ளது. இங்கு நேற்று வைகுண்ட ஏகாதசி சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதிகாலை 1.30 மணிக்கு ஸ்ரீ ஆதிவராகரப் பெருமாள் திருப்பள்ளி எழுச்சி, ஸ்ரீவாரி பெருமாள் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து விஷ்வரூப தரிசனம், வில்வ அர்ச்சனை, துளசி அர்ச்சனை நடைபெற்றது. பின், அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மகாமண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமி புறப்பாடு முடிந்து 4.30 மணிக்கு முக்கிய நிகழ்வான வைகுண்ட வாசல் அதாவது சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !