குற்றாலம் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு!
ADDED :4657 days ago
தென்காசி: குற்றாலம் கூத்தர் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. குற்றாலம் குற்றாலநாதர், அகஸ்தியர் அறக்கட்டளை சார்பில் கூத்தர் கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அறக்கட்டளை மற்றும் அனைத்து இந்து சமுதாய பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அகஸ்தியர் பிறந்த நாளை முன்னிட்டு குற்றாலம்-தென்காசி சாலையின் இருபுறங்களிலும் 18 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது, திருவாவடுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் அன்னதான கூடம் மற்றும் இலவச ஆஸ்பத்திரி கட்டுவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.