ஒட்டன்சத்திரம் பகுதி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமிக்கு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* காளாஞ்சிபட்டி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
* பருமரத்துப்பட்டி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீ பத்மாவதி, ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. நூற்றுக்கணக்கானோர் கோவிந்தா, கோவிந்தா கோசத்துடன் வழிபட்டனர்.