உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பழநி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பழநி; பழநி நகரில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள மேற்குரத வீதி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. அதன் வழியே கருட வாகனத்தில் லட்சுமி நாராயண பெருமாள் எழுந்தருளினார். கோயில் யானை கஸ்தூரி மரியாதை செலுத்தியது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 5:35 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. அதன் வழியே ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சுவாமி எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் உதவி கமிஷனர் லட்சுமி, கண்காணிப்பாளர்கள் அழகர்சாமி கலந்து கொண்டனர். உள்ளூர் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !