மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது திருவண்ணாமலை தீபக்கொப்பரை; நாளை மாலை மகா தீபம்
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழாவின் மகா தீபம் நாளை மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அதையொட்டி, சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீப கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா, கொடியேற்றத்துடன், துவங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி பல்வேறு வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார். மகா தீபம் நாளை மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அதையொட்டி, சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீப கொப்பரையை தோளில் சுமந்தபடி பக்தர்கள் மலைக்கு கொண்டு சென்றனர். டிச., 3 அதிகாலை, 4:00 மணிக்கு கோயில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.