பழநி திருஆவினன்குடி கோயிலில் கோபுர கலசங்கள் பொருத்தம்
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் டிச., 8 கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் சன்னதி கோபுர கலசங்கள் பொருத்தப்பட்டது.
பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த ஆகம விதிகளில் உள்ளது. இதில் முருகனின் மூன்றாம் படை வீடான அடிவாரம் திருஆவினன்குடி கோயில் கடந்த 2014, செப்., 7 ல் நடந்தது. இங்கு கும்பாபிஷேகம் நடைபெறமுகூர்த்த கால் நடும் பணி நவ.5., அதிகாலை நடந்தது. கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகம் நடைபெற யாகசாலை பணிகள், கோயிலின் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் துரிதமாக நடைபெற்று வருகின்றன யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. டிச.8 அன்று திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு மூலவர் சன்னதி விமான கலசம் ராஜகோபுர விமான கலசங்கள் ஏழு உட்பட பிரகார சுற்று சன்னதிகளின் விமான கலசங்கள் என 19 கலசங்கள் நேற்று சிறப்பு பூஜைகளுக்கு பின் பிரகாரம் எடுத்து வரப்பட்டு பொருத்தப்பட்டன. நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், இணை கமிஷனர் மாரிமுத்து பங்கேற்றனர். சிறப்பு பூஜைகளை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்பிரமணியம் குருக்கள் குழுவினர் செய்தனர். ஸ்தபதி விஸ்வ மூர்த்தி கோயில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.