உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயகி அம்மன் கோவிலில் மூலவர் சிலை மீது ஏறி நின்ற பாம்பு; பக்தர்கள் மெய் சிலிர்ப்பு

பெரியநாயகி அம்மன் கோவிலில் மூலவர் சிலை மீது ஏறி நின்ற பாம்பு; பக்தர்கள் மெய் சிலிர்ப்பு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அரசம்பாளையம் பெரியநாயகி அம்மன் கோவிலில் சுவாமி மீது பாம்பு இருந்ததை கண்டு பக்தர்கள் மெய் சிலிர்த்தனர்.


கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில், 40 முதல் 50 ஆண்டு காலம் பழமையானது. இந்த கோவிலில், மாதம் ஒரு முறையும், விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி சிலை மீது பெரிய அளவிலான கருநாகப் பாம்பு ஒன்று இருந்தது. அவ்வழியே நடந்து சென்ற கல்லூரி மாணவர்கள் சிலர் இதைப் பார்த்தவுடன், மொபைல் போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு தெரிய வர, சிலர் இதை நேரில் பார்த்து பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !