பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் டிச., 8 கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பொருட்கள் தயார் செய்யும் பணிகள் மும்முறமாக நடைபெறுகிறது.
பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் முருகனின் மூன்றாம் படை வீடான அடிவாரம் திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற முகூர்த்த கால் நடும் பணி நவ.5.,ல் நடந்தது. கும்பாபிஷேகம் நடைபெற யாகசாலை பணிகள், கோயிலின் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் துரிதமாக நடைபெற்று வருகின்றன யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. டிச.8 ல் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு மூலவர் சன்னதி விமான கலசம் ராஜகோபுர விமான கலசங்கள் ஏழு உட்பட பிரகார சுற்று சன்னதிகளின் விமான கலசங்கள் என 19 கலசங்கள் டிச.1 அன்று பொருத்தப்பட்டன. இந்நிலையில் யாகசாலையில் வைக்கக்கூடிய குடங்களுக்கு நூல் சுற்றி அழகு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கும்பாபிஷேகத்திற்கான அன்னதானம் வழங்கும் பகுதிகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகம் நடைபெற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.