உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று பவுர்ணமி விரதம், பாஞ்சராத்ர தீபம்; ஜோதி வடிவாய் மகா விஷ்ணு தோன்றிய தினம்!

இன்று பவுர்ணமி விரதம், பாஞ்சராத்ர தீபம்; ஜோதி வடிவாய் மகா விஷ்ணு தோன்றிய தினம்!

பாஞ்சராத்திர தீபம் என்பது மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகைக் காத்த நாளைக் குறிக்கும் ஒரு தீப விழாவாகும். இது பொதுவாக கார்த்திகை மாத பௌர்ணமி திதி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது விஷ்ணு கார்த்திகை என்றும் அழைக்கப்படுகிறது. 


சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சியளித்த தினத்தை திருக்கார்த்திகை திருநாளாக கொண்டாடுகிறோம். அதுபோல மகாவிஷ்ணு ஜோதி வடிவாக தோன்றி, உலகத்தை காத்த நாள் விஷ்ணு கார்த்திகை என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாஞ்சராத்திர தீபம் ஏற்றப்படுகிறது. திருக்கார்த்திகைக்கு அடுத்த நாள் பௌர்ணமி திதியில் கார்த்திகை நட்சத்திரத்தன்று பாஞ்சராத்திர தீபம் ஏற்றப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்நாள்  விஷ்ணு கார்த்திகை யாக பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. இன்று விளக்கு ஏற்றி வழிபட்டால் செல்வ வளம் ஏற்படும் என்பது நம்பிக்கை. பெருமாள் கோயில்களில் தீபதரிசனம் செய்ய சகல பிரச்சினைகளும் நீங்கும்!


பவுர்ணமியன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம். சந்திரன் வழிபாடு காலத்தை கடந்த பழமையானதாம். உள்ளம் ஆற்றலுடன் விளங்க சந்திரனின் அனுக்கிரகம் முக்கியம். பவுர்ணமி அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிக்கும். பவுர்ணமியன்று சந்திரனின் அற்புத சக்தியை எளிதாய் அடையலாம். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம் குறையும். நோய் நீங்கும். இன்று ஒருபொழுது மட்டும் உணவு உட்கொண்டு இஷ்ட தெய்வத்தைப் பூஜிக்க வேண்டும்; ஜபம், தியானம், பிரார்த்தனை போன்றவற்றில்  ஆழ்ந்து ஈடுபடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். கேளிக்கைகளில் கலந்துகொள்ளக் கூடாது. துதிப்பாடல், பஜனை, பாராயணம், சத்சங்கம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். சிவசக்தியால் ஒளிரும் சந்திரனை கிரிவலம் வந்து வணங்குவோம்.. நன்மை பெறுவோம்..!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !