உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு தைலக்காப்பு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு தைலக்காப்பு

சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, வரும் 25ம் தேதி வரை மூலவர் தரிசனம் கிடையாது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கார்த்திகை தீபத் திருவிழாவை குமராலய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக கொண்டாடப்படுகிறது. இதில், சிவாலயங்களில் குமராலய தீபமும், சர்வாலய தீபமும் கொண்டாடப்படுகிறது. வைணவ கோவில்களில், கார்த்திகை மாதத்தில் ரோகிணி நட்சத்திரம் கூடிவரும் நாள் விஷ்ணுவாலய தீபம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று விஷ்ணு ஆலயங்களில் தீபத் திருவிழா விழா கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, காலை 6:15 மணிக்கு திருவாரதனம் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் திருப்பாணாழ்வார் மண்டப திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 10:30 மணிக்கு மூலவருக்கு தைலக்காப்பு நடக்கிறது. இதையடுத்து நாளை முதல் வரும் 25ம் தேதி மதியம் வரை தரிசனம் கிடையாது. வரும், 20ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. வரும் 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு மூலவர் தரிசனம் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !