சங்கராபுரத்தில் ஐயப்ப சாமிக்கு மண்டல பூஜை
ADDED :4758 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டில் ஐயப்ப சாமிக்கு மண்டல பூஜை நடந்தது. மூங்கில்துறைப்பட்டு தர்ம சாஸ்தா அன்னதான சேவா சமிதி சார்பில் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி ஐயப்ப சாமி யானை மீது வைத்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்தது.பின்னர் சசி நம்பூதிரி தலைமையில் ஐயப்ப சாமிக்கு கோ பூஜை, கஜ பூஜை, மகாலட்சுமி பூஜை, சங்காபிஷேகம் மற்றும் நெய் அபிஷேகம் செய்விக்கப்பட்டது. திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.