காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிய தங்கத்தேர் ஒப்படைப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டத்திற்கான சிறப்பு பூஜை, ஓரிக்கையில் உள்ள மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 8ம் தேதி நடை பெறுகிறது. இக்கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில், 23 கிலோ தங்கத்தில், உயரம் 23 அடி, 15 அடி நீளம், 13 அடி அகலத்தில், புதிதாக தங்கத்தேர் செய்யப்பட்டுள்ளது. இத்தேரின், வெள்ளோட்ட ம் இன்று, மாலை 3:00 மணிக்கு ஓரிக்கை மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் ந டைபெறுகிறது. இதில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், வடம் பிடித்து இழுத்து தங்கத்தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைக்கிறார். இந்நிலையில், புதிய தங்கத்தேர் வெள்ளோட்டத்திற்கான சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்றார். அதை தொடர்ந்து மூலவர் மகா சுவாமிகள் சன்னிதியில் நடந்த வழிபாட்டிலும் பங்கேற்றார்.