பாரியூர் காளியம்மன் கோவில்10ம் தேதி குண்டம் இறங்குதல்!
கோபிசெட்டிபாளையம்: கடையேழு வள்ளல்களில் முதலாமானவர் பாரி. அவரது பெயராலேயே அமைந்துள்ளது பாரியூர். கோபி அருகில் பாரியூரில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் குண்டம், தேர்திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழாவையொட்டி டிசம்பர் 27ம் தேதி பூச்சாட்டு விழா நடந்தது.ஜனவரி 4ம் தேதி தேர்வெள்ளோட்டமும், 7ம் தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகம்,சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. சந்தனகாப்பு அலங்காரம் மிகவும் விசேஷமாகும். 9ம் தேதி மாவிளக்கு பூஜை, 10ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தலைமை பூசாரியான புதுப்பாளையம் சண்முகம் குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்து குண்டம் இறங்குவார். கோவில் பூசாரிகள், பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வேண்டி தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவர். வரும், 11ம் தேதி மாலை, 4 மணிக்கு தேர்திருவிழா, 12ம் தேதி இரவு, 11 மணிக்கு கோவிலில் இருந்து மலர்களால் நூதன மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. 19ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.