சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை மஹோத்ஸவம்
ADDED :4762 days ago
கொடுமுடி: ஸத்குரு சேஷாத்ரி ஸ்வாமிகள், 84ம் ஆண்டு ஆராதனை மஹோத்ஸவம், ஊஞ்சலூரில் ஜனவரி, ஆறாம் தேதி வரை நடக்கிறது.நேற்று முதல், ஐந்தாம் தேதி வரை காலை, 6.30 முதல் மதியம், 12 மணி வரை ஸ்ரீலலிதா ஹோமம் நடக்கிறது. மதியம் தீபாராதனையும், மாலை மஹனீயர்கள் உபதேசம், நவாவரண பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது.ஆறாம் தேதி காலை, 10 மணிக்கு ஆராதனை வைபவம், மாலை, 3 மணிக்கு ஸத்குரு ஸ்வாமிகளின் ஆசி மங்களாக்ஷதை, இரவு, 8 மணிக்கு ஊர்வலம் நடக்க உள்ளது. தினமும் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை தலைவர் ஸ்ரீராம், உபதலைவர் ஸ்ரீநிவாசன், காரியதரிசி சுரேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.