வென்னிமலை முருகன் கோயிலில் கிரிவலம்
ADDED :4662 days ago
பாவூர்சத்திரம்:வென்னிமலை முருகன் கோயிலில் கிரிவலம் நடந்தது. பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கிரிவலம் செல்வவிநாயகபுரம் கோயிலில் துவங்கி கோலாகலமாக நடந்தது. முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக கமிட்டியார், மார்கழி மாதாந்திர கிரிவலம் கட்டளைதாரர்கள், திருப்பணிகுழுவினர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.