உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம சாஸ்தா கோவிலில் ராம அவதாரத்தில் மகா விஷ்ணு அருள்பாலிப்பு

தர்ம சாஸ்தா கோவிலில் ராம அவதாரத்தில் மகா விஷ்ணு அருள்பாலிப்பு

கோவை; குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 2 பகுதியில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கோவிலில் மண்டல கால சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. பூஜையையொட்டி தசாவதாரத்தில் ஒன்றான ராம அவதாரத்தில் ஸ்ரீ மகா விஷ்ணு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மண்டல கால சிறப்பு பூஜையையொட்டி ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அவதார மகிமை குறித்து பாகவத சப்தாகம் நிகழ்வு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !